ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறுகையில், ‘‘பாஜவுடன் தலைமையிலான ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது 2016ம் ஆண்டு 12ஆயிரம் பேருக்கு எதிரான எப்ஐஆர் ரத்து செய்யப்பட்டது. இப்போது அதை செய்ய முடியுமா? போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டது. இப்போது அதை செய்ய முடியுமா? முதல்வராக ஒரு எப்ஐஆரை கூட திரும்ப பெறமுடியாவிட்டால் அந்த பதவியுடன் ஒருவர் என்ன செய்ய முடியும்? எனவே சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை’’ என்றார்.