ஜம்மு: ஜம்மு சட்டப்பேரவையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் பேரவையின் சிவில் செயலக வளாகத்தின் வரவேற்பு அறை பகுதியில் நேற்று காலை 9 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த விபத்தில் அங்கிருந்த நாற்காலி, மேசை மற்றும் சில புகைப்படங்கள் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன. மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு சட்டப்பேரவையில் தீ விபத்து
0