ஜம்மு: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க போவதில்லை என பாஜ அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான ஆயத்தை பணிகளை தொடங்கி விட்டன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா நேற்று அளித்த பேட்டியில், “ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலை சந்திக்க பாஜ முழுமையாக தயாராகி விட்டது.
பேரவை தேர்தலுக்கு முன் ஜம்முவில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பாஜ கூட்டணி வைத்து கொள்ளாது. 10 சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது இறுதியானால் கூட்டாக தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைப்போம்” என்று கூறினார்.