டெல்லி: ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையர்கள் பேட்டியளித்துள்ளார். சட்டபேரவை தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 11,838 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.