Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர.இத்தகைய,பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதல் எதிரொலியாக டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல், நெல்லை ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.