புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக தற்போது பொறுப்பு வகித்து வரும் ஆர்.ஆர்.ஸ்வைன் அடுத்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி நளின் பிரபாத்(55) நியமிக்கப்பட்டுள்ளார்.
1992 ஆந்திரா பிரிவை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி நளின் பிரபாத் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பதவி வகித்து வந்தார். பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு படையான தேசிய பாதுகாப்பு படையின்(என்எஸ்ஜி) தலைவராக கடந்த ஏப்ரல் 20ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் 2028 ஆகஸ்ட் 31ம் தேதி வரை அதாவது ஓய்வு பெறும் தேதி வரை தேசிய பாதுகாப்பு படை தலைவராக பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நளின் பிரபாத்தின் தேசிய பாதுகாப்பு படை தலைவருக்கான பதவிக்காலம் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் நளின் பிரபாத் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.