ஓசூர்: இந்தியாவில் ஜம்ஜெட்பூருக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் ஒசூரில் டாடா நிறுவனம் புதிய தொழில் நகரத்தை உருவாக்குகிறது.உருக்கு தொழிற்சாலையை ஜம்ஜெட்பூரில் அமைத்த டாடா நிறுவனம் ஒசூரில் மின்னணு தொழில் நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. டாடாவின் வருகையால் ஒசூரும் ஜம்ஜெட்பூருக்கு இணையான தொழில்நகராக உருவாகும் என்பது தமிழ்நாடு அரசின் நம்பிக்கையாகும்.