ராமேஸ்வரம்: இலங்கையில் முதன்முறையாக திரிகோணமலை அருகே சம்பூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா எம்பி சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வாடிவாசல் வழியே பாய்ந்து வந்த 300க்கும் மேற்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகளை அடக்கினர். வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தலா ₹1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.