புதுகை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழவேகுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 750 காளைகள் அழைத்து வரப்பட்டன. 250 வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதையடுத்து, மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.