Saturday, February 24, 2024
Home » ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்கள்: அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்கள்: அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு

by Suresh

டெல்லி: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பீட்டா அமைப்புகள் தாக்கல் செய்யத மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த சட்டம் உள்நோக்கத்துடன் இயற்றப்பட்டது அல்ல எனவும் இதுபோன்ற சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உளது எனவும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த சட்டம் விலங்கு வதையை குறைப்பதாகவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டை காக்க உதவுமா என்பது குறித்தான விவாதங்கள் சட்டப்பேரவைக்குள் விவாதிக்க வேண்டியதே தவிர அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேள்வி எழுப்பி விசாரிக்குமாறு கேட்க முடியாது எனவும் தமிழ்நாடு பண்பாட்டின் அங்கமாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது என சட்டப்பேரவை தீர்மானித்து சட்டம் இயற்றப்பட்டுவிட்டதால் சட்டப்பேரவை நோக்கத்தை நீதிமன்றம் இடையூறு செய்யப்போவதில்லை எனவும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை உறுதி செய்து செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பீட்டா அமைப்பு கடந்த ஜூலை மாதம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீண்ட நாட்களாக விசாரிக்காமல் இருப்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற முறையீடு உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் குறித்து பட்டியலிடுவதை குறித்து முடிவெடுக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi