புதுடெல்லி: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஆல்வார், நீம்ரானா, பெக்ரார் மற்றும் ஷாபுரா நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி சோதனை நடத்தினர். இதில், ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரூ.2.32 கோடி பணம், ரூ.64 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதன் மூலம், சட்ட விரோதமாக ஒப்பந்தப்புள்ளி பெறவும், பில்களுக்கு மேலிட ஒப்புதல் கிடைக்கவும், ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் நடந்த முறைகேடுகளை மறைக்கவும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது.