அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் குரூப் சி பிரிவில் நேற்று முன்தினம், நாகாலாந்து அணியை மும்பை அணி, 189 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பைக்காக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே, 117 பந்துகளை எதிர்கொண்டு, 11 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 181 ரன் குவித்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் குறைந்த வயதில் 150 பிளஸ் ரன் குவித்த வீரராக, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை மாத்ரே முறியடித்துள்ளார்.
* ஏ பிரிவு போட்டியில் ஒரு இன்னிங்சில் குறைந்த வயதில் 150 பிளஸ் ரன் குவித்த வீரர்கள்
வீரர் வயது அணி
ஆயுஷ் மாத்ரே 17 ஆண்டு 168 நாள் மும்பை
ஜெய்ஸ்வால் 17 ஆண்டு 291 நாள் மும்பை
ராபின் உத்தப்பா 19 ஆண்டு 63 நாள் கர்நாடகா
டாம் பிரெஸ்ட் 19 ஆண்டு 136 நாள் ஹாம்ப்ஷையர்