கோவை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்திலிருந்து நேற்று டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷம் ஒரு வெற்றியின் அடையாளமாகும். வெற்றிவேல் வீரவேல் என பண்டைய காலத்து அரசர்கள் போரில் ஜெயித்ததும் எப்படி முழங்கினார்களோ? அதே போல் தான் இது. இந்தியா முழுக்க மக்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுகின்றனர். இது குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் என தான் கூறினேன். இப்போதும் அதையே கூறுகிறேன். நமது மக்களின் உணர்வாகவே இதை பார்க்க வேண்டும். பாஜகவின் அகில இந்திய தலைமை, கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.