மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா, சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்தனர். ஐ.சி.சி. தலைவராக உள்ள கிரேக் பார்க்லே பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார். டிச.1-ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா செயல்படுவார் என அறிவித்துள்ளனர்.