ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் ரயிலில் ஆர்பிஎப் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் நிதி அளிப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வீரரின் இறுதிச்சடங்கிற்கு ரூ. 20,000 மேலும் பொது காப்பீட்டுத் தொகையாக ரூ. 65,000 வழங்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஆர்.பி.எஃப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே வீரர் திகாராம் மீனா, 3 பயணிகள் இறந்தனர், ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எஃப். காவலர் சேத்தன் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.