சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி ஆஜராகாததால் விசாரணையை சிறிது நேரம் நீதிபதி ஒத்திவைத்தார். ஆள் கடத்தல் வழக்கில் மதியம் 2.30 மணிக்கு ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார். ஏடிஜிபி ஜெயராம் உயர்நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் ஜெகன்மூர்த்தி இன்னும் வரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புரட்சி பாரதம் கட்சி வழக்கறிஞர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
ஜெகன்மூர்த்தி ஆஜராகாததால் விசாரணை சிறிதுநேரம் ஒத்திவைப்பு
0