சென்னை: புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிவுசெய்ததை அடுத்து முன்ஜாமீன் கோரி ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஜெகன்மூர்த்தியை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.