Friday, February 23, 2024
Home » ஜெகன்மோகன் கட்சியில் இருந்து மேலும் பல எம்எல்ஏக்கள் மாற்றுக்கட்சிக்கு தாவ திட்டம்?: ஆந்திராவில் பரபரப்பு

ஜெகன்மோகன் கட்சியில் இருந்து மேலும் பல எம்எல்ஏக்கள் மாற்றுக்கட்சிக்கு தாவ திட்டம்?: ஆந்திராவில் பரபரப்பு

by Suresh

திருமலை: ஆந்திராவில் ெஜகன்மோகன் கட்சியில் இருந்து மேலும் பல எம்எல்ஏக்கள் மாற்றுக்கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் மக்கள் பணிகளை சரிவர செய்யாத அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர முடியாது என முதல்வர் ஜெகன்மோகன் பலமுறை பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது வரும் தேர்தலில் 40 சதவீத தொகுதிகளை சேர்ந்த அமைச்சர், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு தரமுடியாது எனக்கூறினார். அதே கூட்டத்தில் முதற்கட்டமாக 20 பேருக்கு வரும் தேர்தலில் சீட் தரமுடியாது என தெரிவித்தார். மற்றவர்களின் பெயர்களும் வெளியிடுவேன் எனவும் கூறினார். அந்த லிஸ்ட்டில் தங்கள் பெயர் உள்ளதா? என்ற சந்தேகத்துடன் மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜெகன்மோகன் வாய்ப்பு தர மறுத்ததால் கட்சி தாவ பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த எம்எல்சியான வம்சி, நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்தார். அதைத்தொடர்ந்து ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர், சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி சட்டமன்ற தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஆளராமகிருஷ்ணா, தனது எம்எல்ஏ பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்துவிட்டு நேற்று ஜெகன்மோகனின் தங்கை சர்மிளா முன்னிலையில் காங்கிரசில் இணைந்துள்ளார். இதேபோல் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் உள்ள பல அதிருப்தி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சிலரும் மாற்று கட்சிகளில் இணைய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் மாற்றுக்கட்சி தலைவர்களிடம் பேசி வருவதாகவும், வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பல அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கட்சி தாவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

fifteen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi