சென்னை: ஜாபர்கான்பேட்டையில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவில் சிலர் போதை ஊசி தயாரித்து விற்பனை ெசய்வதாக எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர் ராம்பிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று, ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஆட்டோவில் மறைத்து வைத்து போதை மாத்திரைகளை கரைத்து அதை ஊசியில் ஏற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அதிரடியாக ஆட்டோவில் போதை ஊசி விற்பனை செய்த ஆதம்பாக்கம் பகுதியைசேர்ந்த கலிதீர்த்த பெருமாள் (26), எம்ஜிஆர்.நகர் வி.என்.ஜானகி தெருவை சேர்ந்த கணேசன் (37), மேற்கு ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த விக்ரம் (28), எம்ஜிஆர்.நகர் சூளைபள்ளம் சிவ விஷ்ணு கோயில் தெருவை சேர்ந்த விஷ்வா (21), சஞ்சய் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 போதை மாத்திரைகள், 375 போதை ஊசிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. ைகது செய்யப்பட்ட 5 பேரில் கணேசன், விக்ரம், விஷ்வா ஆகியோர் மீது பல்ேவறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.