சென்னை : முன்னாள் போலிஸ் அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்றது ஐகோர்ட். வழக்கில் விளக்கங்கள் பெறுவதற்காக விசாரணையை ஆகஸ்ட் 27க்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். வீட்டுமனை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கின் அடிப்படையில் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்திருந்தது.