பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் உலகின் 3ம் நிலை இணையான இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவஸோரியும், 4ம் நிலை இணையான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங்கும் மோதினர். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இத்தாலியின் எரானி-வவஸோரி முதல் செட்டை 6-4 என கைப்பற்றினர். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என கைப்பற்றி அமெரிக்க கலப்பு இரட்டையர் இணையை வீழ்த்தி, கோப்பையை வென்றனர். அவர்கள், ஆனந்த கண்ணீருடன் வெற்றி கோப்பையை கையில் ஏந்தி, ரசிகர்களிடம் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
கலப்பு இரட்டையரில் இத்தாலி இணை சாம்பியன்
0
previous post