சென்னை: இத்தாலியில் நடக்கும் போலோக்னா குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் இருந்து புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான புத்தகங்கள் சுமார் 150 வகைகள், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இம்மாதம் வர உள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய இந்த தமிழ் மொழி பெயர்ப்பு தலைப்புகள், மாணவர்களின் வாசிப்பு விருப்பங்களை விரிவுபடுத்துவதையும் சமகால பாடங்களில் ஆர்வத்தைத் தூண்டுவதையும் நோக்கமாக இருக்கின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் இளந்தளிர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் பிராங்பர்ட் போக் கண்காட்சியில் தமிழ்நாடு பங்கேற்றதை அடுத்து, இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ், குழந்தை இலக்கியத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் வகையில், பள்ளி மற்றும் பொது நூலகங்களுக்கு 21 புத்தகங்களின் தொடக்கத் தொகுதி ஏற்கனவே விநியோகிக்கப்பட்டது.
போலோக்னா புத்தகக் கண்காட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 168 தலைப்புகளில், 60 மொழியாக்கம் செய்யப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் பொது நூலகங்களில் வெளியிடுவதற்குத் தயார்படுத்துவதற்கான லே-அவுட் வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, இந்த மொழி பெயர்ப்பு புத்தகங்கள் விரைவில் தமிழ்நாடு வர இருக்கின்றன. இளந்தளிர் திட்டத்தின் கீழ் இந்த புத்தகங்கள் மாணவ மாணவியருக்கு வாசிக்க வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் இதுபோன்ற முயற்சியை வரவேற்கிறார்கள். குறிப்பாக கொரோனா காலத்தில் குழந்தைகள் நீண்ட நாட்கள் வீடுகளில் முடங்கிய நிலையில், அந்த நேரத்தில் அதிகம் வாசிக்கும் பழக்கத்துக்கு வந்தனர். ஆனால் இப்போது, பள்ளி திரும்பியவுடன், பெரும்பாலும் பாடப்புத்தகங்களுடன் அவர்கள் நாள்கள் கழிகின்றன. அதனால் அவர்கள் வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய புத்தகங்களைப் படிக்க விருப்பம் காட்டுகின்றனர். இதுவே எங்கள் மாணவர்களுக்குத் தேவை. இந்தக் கதைகள் மாணவர்களை தற்போதைய நிகழ்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள வளர்ச்சிகள் பற்றி மிகவும் விமர்சனரீதியாக சிந்திக்க ஊக்குவிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.