குசிந்த்வாரா: மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ஜூனார்டியோ பகுதியில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘இந்தியாவின் வளர்ச்சியை உலகமே பாராட்டி வரும் நிலையில், காங்கிரசால் மட்டும் நாட்டில் எந்த சாதகமான மாற்றத்தையும் காண முடியவில்லை. சகோதரரும், சகோதரியும் (ராகுல், பிரியங்காவை குறிப்பிட்டார்) தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று, ஒன்றிய பாஜ அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் இத்தாலியை பூர்வீகமாக கொண்டவர்கள். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சியை இந்திய மக்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். நாங்கள் ராமர் கோயிலை கட்டி உள்ளோம். 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துள்ளோம். முத்தலாக்கை ரத்து செய்துள்ளோம். பிஎப்ஐ அமைப்பை தடை செய்து நாட்டின் தீவிரவாத சாத்தியக்கூறுகளை முறியடித்துள்ளோம்’’ என்றார்.