சென்னை: இந்திய மற்றும் இத்தாலிய வர்த்தக சபை சார்பில் வரும் 16ம் தேதி முதல் இத்தாலி மொழி கற்பிக்கும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்தியா - இத்தாலி தொழில் மற்றும் வர்த்தக சபை சார்பில் இத்தாலி மொழி பாடத்தை கற்பிக்கும் வகையில் வரும் 16ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் ஆர்வமுடையவர்கள் www.languagelabchennai.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். மேலும் 9080582082 என்ற தொடர்பு எண்ணில் விவரங்களை கேட்டறியலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement


