Monday, February 26, 2024
Home » ஐ.டி. நிறுவனங்கள் பங்கேற்கும் 2023-24ம் ஆண்டுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணல்

ஐ.டி. நிறுவனங்கள் பங்கேற்கும் 2023-24ம் ஆண்டுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணல்

by Ranjith

சென்னை: கல்லூரிகளில் படிக்கும் போதே வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் தேர்வாக வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பங்குபெற்று தேர்வாகும் மாணவர்களுக்கு பெரிய நிறுவனங்கள் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாக உலக பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலை காரணமாக, இன்ஜினியரிங் கல்லூரிகளின் வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். போன்ற பெரிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்காமல் இருந்து வருகின்றன.

நடப்பு கல்வியாண்டிலும் அதே நிலைதான் தொடருகின்றன. அதுமட்டுமல்லாமல் வளாக வேலைவாய்ப்பு நேர்காணலும் இந்த ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் தாமதமாகவே தொடங்கின. இதில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தவிர, மற்ற நிறுவனங்கள் பங்கேற்று குறிப்பிட்ட அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. கல்வியாண்டின் தொடக்கத்தில் கணிக்கப்பட்ட அளவுக்கு வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் மோசமாக இல்லை என்றும் கல்லூரிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு கல்லூரிக்கு வருகை தருவார்கள் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிறுவனங்களின் வருகைக்காக கல்லூரிகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அதன்படி, டி.சி.எஸ். நிறுவனம் அடுத்த மாதத்தில் (ஜனவரி) சில கல்லூரிகளுக்கு சென்று வேலைவாய்ப்பு நேர்காணலில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே பிற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கல்லூரிகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்றும், அதற்கேற்ற வகையில் மாணவ, மாணவிகளை தயார்படுத்தி வருகிறோம் என்றும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

18 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi