சாத்தூர், ஆக.14: சாத்தூரில் இருந்து இருக்கன்குடி வரை புதிதாக போடப்பட்ட நடைபாதைக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். சாத்தூரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வந்தனர். பாதயாத்தை செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்காமல் இருக்கவும், வாகன ஓட்டிகள் நிம்மதியாக இடையூறு இல்லாமல் வாகனங்களை ஓட்டி செல்லவும் ரூ.30 கோடி மதிப்பில் நடைபாதை அமைத்து தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நடைபாதைக்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ள பக்தர்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை செல்கின்றனர்.
இந்த பாதையில் இரவு நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். நடை பாதையில் மின் விளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரத்தில் நடந்து செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆகவே நடைபாதை முழுவதும் போதியளவு மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.