இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் நீடிக்கும் அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார். பாகிஸ்தான் கனிமவள உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “பாகிஸ்தான், இந்தியா இடையே நடந்த போர்களின் விளைவுகள் அனைவருக்கும் தெரியும். காஷ்மீர் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை பதற்றமான சூழலே நிலவும். இதனால் உறவுகள் நீடிக்காது. எனவே இந்தியா, பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பிரச்னைகள் குறித்து இந்தியாவுடன் பேச தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.