சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் செயல்படும் பள்ளிகள் மற்றும் வட்டார வள மையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான போட்டித் தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 22ம் தேதி தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சான்று சரிபார்ப்பு பட்டியல்கள் 26ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
மேலும், இந்த தேர்வுப் பட்டியலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்கள் அதற்கான உரிய ஆவணங்களை நியமன அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான நியமன ஆணைகள், இந்த பணி நியமனத்துக்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பிறகு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் தனித்தனியாக வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.