மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1983 ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவரும் தற்போது இஸ்ரோவில் குவாலிட்டி அனலைசிஸ் ப்ராஜெக்ட் மேனேஜராக பணியாற்றிவருபவர் விஞ்ஞானி கார்த்திகேயன். இவர் தான் படித்த மேற்கண்ட பள்ளியில் நேற்று நடைபெற்ற தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் நடந்த உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலை வாய்ப்பு பெற என்னென்ன உயர் கல்வி படிக்கலாம், என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது’’ என மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில் 11,12ம் வகுப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விஞ்ஞானியிடம் தங்களின் சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மா.த.விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.