பெங்களூரு: ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் செல்வதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக செப்.2-ம் தேதி விண்ணில் ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட்டது. 11 நாட்கள் பயணத்துக்கு பின்னர் முழுமையாக புவியின் ஈர்ப்புவிசை மண்டலத்தை விட்டு விண்கலம் வெளியேறி உள்ளது. புவியிலிருந்து 9.2 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் பயணித்து புவியின் ஈர்ப்பு மண்டலத்தை விண்கலம் அடைந்துள்ளது.