ஜெருசலேம்: காசாவில் ஹமாசுக்கு எதிராக போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாட்களாக கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 450 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், கிடியோன் சாரியாட்ஸ் எனும் புதிய ஆபரேஷனை இஸ்ரேல் ராணுவம் நேற்று தொடங்கியதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பாதகாப்பு அமைச்சர் கூறுகையில், ‘‘இஸ்ரேல் ராணுவத்தின் சிறந்த படைகள் தலைமையில் புதிய ஆபரேஷன் நடத்தப்படும். இதன் மூலம் பயணக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் விரைந்து விடுவிக்க அழுத்தம் தரப்படும்’’ என்றார்.