டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவுக்கு இஸ்ரேல் நடிகை நன்றி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான மோதல் குறித்து, இஸ்ரேலிய நடிகை ரோனா-லீ ஷிமோன் அளித்த பேட்டியில், ‘மதத்தை நாம் அழகானதாக மாற்றினால் அது ஒரு அழகான விஷயம். எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதுவே சிறந்த வழியாகும். சிலருக்கு இருக்கும் அவநம்பிக்கையால், மதத்தை மிக மோசமாக பயன்படுத்துகின்றனர்.
அதனை கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் கண்டோம். அவர்கள் தான் ஹமாஸ்; ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர். அவர்கள் நிறுத்த மாட்டார்கள். இந்தியா போன்ற சிறந்த நட்பு நாடுகளை பெற்றதற்காக நாங்கள் நன்றி உடையவராக உணர்கிறேன். இந்திய மக்களை நேசிக்கிறேன். இப்போது தான் அது எனக்குப் புரிகிறது. இந்தியா செய்த முதல் காரியம் என்னவென்றால், 7ம் தேதி நடந்த கொடூரமான செயலைக் கண்டித்ததுதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு பக்கபலமாகவும் இந்தியா இருப்பதாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.