நபாடியா: தெற்கு லெபனான் நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர். தெற்கு லெபனானை நோக்கிய மலைகளில் ஹிஸ்புல்லா குழுக்களின் சொத்துக்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து லெபனானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் கட்டிடத்தின மேல்தளம் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் காயமடைந்தனர். கட்டிடத்திற்குள் இருந்த யாரையாவது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உடனடியாக தெரியவில்லை. இஸ்ரேலின் நேற்றைய தாக்குதல் வழக்கத்தை காட்டிலும் மிகவும் தீவிரமாக இருந்தது. லெபனான் அதிபர், இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.