சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக, அந்நாடுகளுக்கு வேலை மற்றும் உயர்கல்வி நிமித்தமாகச் சென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 12 தமிழர்களை போர்க்கால அடிப்படையில் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று காலை 6.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்களின் சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலம் அமைச்சர் ஆவடி சாமு நாசர் அனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது திமுக மாநில சிறுபான்மையினரும், நலப்பிரிவு இணைச் செயலாளருமான சி.ஜெரால்டு, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கிய 12 தமிழர்கள் மீட்பு
0