டெல்லி: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் 27 பேர் இன்று காலை, சிறப்பு விமானம் மூலம் டெல்லி வர உள்ளனர். அவர்களில் 24 பேர் இன்று பகல் 12:10 மணிக்கு, டெல்லியில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2:50 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைய உள்ளனர். மேலும் 2 பேர் மாலை 4:20 மணிக்கு, சென்னை உள்நாட்டு நிலையம் வரவுள்ளனர். ஒரு பயணி மட்டும், பிற்பகல் 2:45 மணிக்கு, கோவை சென்றடைகிறார்.