டெய்ர் அல்பலாஹ்: காசாவில் அகதிகள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஏராளமான பாலஸ்தீனர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று காலை தொழுகை செய்து கொண்டிருந்தபோது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 100 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.