கெய்ரோ: தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 39 ேபர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் 10 மாதங்களை கடந்து நீடித்துவரும் நிலையில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் தெற்கு காசாவின் பல்வேறு இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. கான்யூனிசின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் பல்வேறு இடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.