இஸ்ரேல் பலவீனமடைந்து விட்டதால் அமெரிக்காவிடம் உதவி கேட்கிறது. களத்துக்கு அமெரிக்கா வந்திருப்பதே இஸ்ரேலின் இயலாமையைக் காட்டுகிறது என ஈரான் தலைவர் கமேனி கூறியுள்ளார். தற்போது வரை ஈரான் மக்கள் காட்டி வரும் மன உறுதியை தொடர்ந்து காட்ட வேண்டும் என நாட்டு மக்களுக்கு கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் 7 நாட்களாக தாக்கிய போதிலும் ஈரானின் முக்கிய அணு ஆராய்ச்சி நிலையத்தை தொட முடியவில்லை. ஈரானில் மலைகளுக்கு நடுவே பலநூறு அடி ஆழச் சுரங்கத்தில் அமைந்துள்ளது ஃபர்தோ அணு ஆராய்ச்சி மையம். இஸ்ரேலால் ஃபர்தோ அணு ஆராய்ச்சி மையத்தை தகர்க்க முடியாது என்பதால் அமெரிக்காவிடம் உதவி கேட்கிறது.
அமெரிக்காவிடம் உள்ள ஆழம் சென்று தாக்கும் MOP ஏவுகணைகளை பயன்படுத்த இஸ்ரேல் வலியுறுத்துவதாகவும், ஈரானின் பதிலடியால் இஸ்ரேலில் சேதம் அதிகரித்து வருவதால் அமெரிக்கா போர் விமானங்களை அனுப்பி உள்ளது என கமேனி கூறினார். நிலைமை தீவிரமடைந்து வருவதால் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இறங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.