இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 10-வது நாளாக தொடரும் நிலையில் பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. பிரிட்டன் தலைநகர் லண்டன், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ ஆகிய இடங்களிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடினர். லண்டனில் சுமார் 1000 பேர் மெழுகுவர்த்தி ஏற்றி இஸ்ரேலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு பேரணி நடத்தினர். இதேபோல் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், துருக்கி ஆகிய நாடுகளில் போராட்டம் நடைபெற்றது.












இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம்..!!
by Nithya