சென்னை: சென்னையில் நேற்று நடந்த ஐஎஸ்எல் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சென்னையின் எப்சி – பஞ்சாப் எப்சி அணிகள் மோதின. துவக்கம் முதலே இந்த போட்டியில் சென்னையின் ஆதிக்கமே காணப்பட்டது. போட்டியின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை வென்றது. இதற்கு முந்தைய போட்டியிலும் சென்னை அணி, ஈஸ்ட் பெங்கால் எப்சி அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் முடிவில் சென்னையின் எப்சி அணி, புள்ளிப் பட்டியலில், 21 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை அபாரம்
0