டோக்கியோ: ஜப்பானில் பிரதமராக இருந்த பியூமோ கிஷிடாவிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான ஷீகெரு இஷிபா கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த அக்டோபர் 1ம் தேதி அவர் பிரதமராக பதவி ஏற்றார். பின்னர், அக்டோபர் 27ம் தேதி நடந்த தேர்தலில் இஷிபாவின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், கொமெய்டோ கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 465 இடங்களை கொண்ட கீழவையில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கூட்டணி யால் பெரும்பான்மை பெறமுடியவில்லை.
இதனையடுத்து நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நடந்த வாக்கெடுப்பில் 221-160 என்ற வாக்கு வித்தியாசத்தில் எதிர்கட்சி தலைவர் யோஷிஹிகோவை இஷிபா வீழ்த்தி மீண்டும் பிரதமராக தேர்வானார்.
ஜப்பானின் பிரதமராக இஷிபா மீண்டும் தேர்வு
0