மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இருவர் கைதான நிலையில் கார்த்திகேயன், உசேன், ராஜேஷ் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரியை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மாநகராட்சி ஆணையர் ஆய்வுக் கூட்டத்தில் முறைகேடு அம்பலமான நிலையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 2 உதவி ஆணையர்கள் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் வரி குறைப்பு முறைகேடு நடந்தது உறுதியானது
சொத்து வரி விதிப்பில் முறைகேடு -மேலும் 3 பேர் கைது
0