கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியை சேர்ந்தவர் கோபிக்கண்ணன் (35). டெய்லர். மனைவி லோகேஸ்வரி (30).நர்ஸ். இவர்களது மகன் கார்த்திகேயன் (8). லோகேஸ்வரி நேற்று முன்தினம் இரவுப் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் கோபிக்கண்ணனும் கார்த்திகேயனும் இரும்புக் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று காலை, நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது, கட்டில் உடைந்து தந்தை, மகன் இறந்து கிடந்தனர். சாணார்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிலில் நட்டு கழன்று இரும்பு சீட் கீழே இறங்கியதில் இருவரின் கழுத்தும் சீட்டுக்கு மேலே இருந்த கம்பிக்கு இடையில் சிக்கி கழுத்து நசுங்கி இறந்தது தெரிய வந்துள்ளது.