டுபிளின்: அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் 3 ஒன்டே, 3 டி.20 போட்டியில் மோதுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வென்ற நிலையில், 2வது போட்டி மழையால் ரத்தானது. 3வது போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 385 ரன் குவித்தது.
கீசி கார்டி 170 ரன் விளாசினார். கேப்டன் ஷாய் ஹோப் 75, ஜஸ்டின் கிரீவ்ஸ் 50 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து அணிக்கு மழை குறுக்கீடால் 46 ஓவரில் 363 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 29.5 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 197 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது.