ஈராக்கில் திருமண விழாவில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 113 பேர் பலியாகினர். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ஹம்தநியா நகரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டு இருந்தது. விழா மண்டபத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட போது, ஏற்பட்ட தீப்பொறி, இருப்பு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதையடுத்து பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. பலூன்களை நிரப்ப வைக்கப்பட்டு இருந்த சிலிண்டர்கள், வெடிகுண்டுகள் போல வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் மணமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 113 பேர் உயிரிழந்தனர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 150 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



















