தெஹ்ரான்: இஸ்ரேல்-ஈரான் மோதல் 5வது நாளாக இன்று நீடித்து வருகிறது. கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள். ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது.
இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் இரவு முழுவதும் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட போர்க்கால தலைமை தளபதி அலி ஷட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன. இவர், ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.