குமரி: ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர். போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்து மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரியைச் சேர்ந்த 1,000 மீனவர்களை மீட்க கோரிக்கை
0