Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் வரவேற்பு; எனினும், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை இது கட்டுப்படுத்தாது எனவும் நேதன்யாகு தெரிவிப்பு

ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த போர் நிறுத்தம் லெபனான் மீதான தாக்குதலை கட்டுப்படுத்தாது என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான், லெபனான் மீதான தாக்குதலும் நிறுத்தம் எனத் தெரிவித்திருந்தது.

"ஈரான் இனி அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானின் அண்டை அரபு நாடுகள் மற்றும் உலகிற்கு அணு, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சியையும் இஸ்ரேல் ஆதரிக்கிறது. வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் பிராந்திய நட்பு நாடுகள் பகிர்ந்து கொள்ளும் இந்த இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் கூறியுள்ளது. இந்த இரண்டு வார போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்காது என நெதன்யாகுவின் அலுவலகம் இன்று(08-04-2026) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது 10 அம்சத் திட்டத்திற்கு, அமெரிக்கா தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஏற்றுக்கொள்வதும், அனைத்துத் தடைகளையும் நீக்குவதும் தேவைப்படும் என்று ஈரான் கூறியது. ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் கட்டுப்பாடு, மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறுதல், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் சட்டப்பூர்வமாக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஆகியவையும் இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படும் என்று ஈரான் கூறியது.

ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவு கிடைத்ததை டிரம்ப் உறுதிப்படுத்தினார், மேலும் "பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது ஒரு நடைமுறைக்கு உகந்த அடிப்படை என்று தாம் நம்புவதாகவும்" கூறினார்.