* சி.வி.சண்முகம் இறுதி எச்சரிக்கை
விழுப்புரம் அருகே கோலியனூரில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சி.வி சண்முகம் எம்பி பேசியதாவது: நாம் இந்த மேடையில் வெள்ளை சட்டை, வேட்டியுடன் அமர்ந்திருக்கிறோம் என்றால் பேரறிஞர் அண்ணா தான் காரணம். ஏழை, எளியவர்களையும் சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 93% இருக்கிறார்கள். முன்னேறிய பிரிவினர் 6% மட்டுமே இருக்கிறார்கள். 1967ல் அண்ணா தலைமையிலான திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது. இந்த 93% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. படிப்பு இல்லை. ஆனால் வேலைவாய்ப்பும், படிப்பும் அந்த 6% மக்களுக்கே கிடைத்தது. சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திலும் அவர்களே இருந்தார்கள். அதை மாற்றி அனைவருக்கும் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர் அண்ணா. திராவிட இயக்க மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணகர்த்தா பேரறிஞர் அண்ணா.
தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த அண்ணா குறித்துப் பேச உங்களுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுங்கள். அண்ணாமலை எங்களை வாழ வைத்த தலைவர்களை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை செல்வது பாதயாத்திரையா? அல்லது வசூல்யாத்திரையா?. வசூல் யாத்திரைன்னுதான் சொல்லறாங்க. சரி எதையாவது நடத்திட்டுபோங்க. ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்ைல. யாரும் பேசவில்லை. திருவிழாவில் காணாமல்போன குழந்தைபோல மாறிவிட்டார் அண்ணாமலை. தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்வதற்காக நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்வதைப்போல நானும் இருக்கிறேன் என்று பேசிவருகிறார். அதற்காக எங்கள் தலைவர்களை இழிவுபடுத்தாதே.
அதிமுக தொண்டர்கள் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுதான் உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. தைரியம் இருந்தால் அதிமுக கூட்டணி பிடிக்கவில்லை என்று கூறுங்கள். அண்ணாமலை, நான் ஐபிஎஸ் ஆபீசர் என்று கூறிவருகிறார். அவர் என்ன காந்திக்கு பக்கத்துவீடா. நேற்றுகூட ஒரு ஐபிஎஸ் அதிகாரி டிஐஜி முருகன் மீது பாலியல் வழக்கு போட்டிருக்கிறார்கள். உங்கள் கட்சியிலும் இதுபோல புளுபிரிண்ட் புகார்கள் வந்திட்டிருக்கு. ஐபிஎஸ் படிச்ச திமிரு, ஆணவத்தில் பேசுகிறார். தலைவர்களை பற்றி பேசும்போது மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேவை என்பதை பாஜக தேசிய தலைமை உணர்ந்துள்ளது. ஆனால், அதற்கு நேர் எதிராக அண்ணாமலை செயல்படுகிறார். மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை.
எங்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் குறிக்கோள். உங்கள் தேசியத் தலைமையை ஏற்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அண்ணாமலை இந்த கூட்டணியை முறிக்க வேண்டுமென்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை இதேபோல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் ஒருமுடிவை எடுக்க வேண்டுமென்று எங்கள் தலைமையை நாங்களும் வலியுறுத்துவோம். முடிவு கட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
* அண்ணாமலை, நான் ஐபிஎஸ் ஆபீசர் என்று கூறிவருகிறார். அவர் என்ன காந்திக்கு பக்கத்துவீடா. நேற்றுகூட ஒரு ஐபிஎஸ் அதிகாரி டிஐஜி முருகன் மீது பாலியல் வழக்கு போட்டிருக்கிறார்கள். உங்கள் கட்சியிலும் இதுபோல புளு
பிரிண்ட் புகார்கள் வந்திட்டிருக்கு.