ஈரோடு: ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரெங்கராஜ் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த எஸ்.ஐ. சுஜாதாவுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்கு அருண் ரெங்கராஜ் தீ வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்தபோது உதவி ஆய்வாளராக இருந்த சுஜாதா என்பவருடன் அருண் ரெங்கராஜுக்கு தொடர்பு உள்ளது. வீட்டுக்கு தீ வைத்துக்கொண்டு உள்ளேயே இருந்த ரங்கராஜை போலீசார் மீட்டுள்ளனர்.